கூட்டமைப்பு வரலாறு

25.01.2004 அன்று கர்நாடகா கவுண்டர் சேவை சங்கம், பெங்களூர் அணைத்து கொங்கு இயக்கங்களையும், சமுதாய பெரியோர்களையும் அழைத்து ஒரு கருத்தாய்வு நடத்தியது. இக்கூட்டத்தின் முடிவில், கலந்து கொண்ட பெருமான்மையோரின் விருப்பத்திர்க்கு இணங்க, அனைத்து கொங்கு இயக்கங்களையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூர் கூட்டத்தினை தொடர்ந்து அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கொங்கு இயக்கங்களையும் அழைத்து சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கொங்கு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் சார்பின்றி, உலகளாவிய நிலையில் ஆங்காங்கு இயங்கிவரும் கொங்கு வெள்ளாளர் சமுதாய அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவிற்குஏற்ப கொங்கு வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு உருபெற்று தொடங்கப்பட்டது, தொடங்கியவுடன் சங்கங்கள் உறுப்பினராக பதிவு செய்து தொடங்கிய கூட்டமைப்பு இன்றளவில் 28 சங்கங்களை உள்ளடக்கிய முக்கிய இயக்கமாக கொங்கு சமுதயாத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது.


கூட்டமைப்பின் தலைவராக, சென்னைகொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றிய திரு. கே.சி. காளியண்ணன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதுபோல கூட்டமைப்பின் பொது செயலாளராக, கர்நாடக கவுண்டர் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய திரு. தேர்வேந்தேன் துரைராசு அவர்களும், பொருளாளராக, கொங்கு நாட்டுகவுண்டர்கள் நல அறக்கட்டளையின் செயலாளராக பணியாற்றிய திரு. கை கந்தசாமி அவர்களும், மற்ற பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு உறுப்பினர் சங்கங்களில் பணியாற்றும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய சிறப்பான செயற்குழு கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு வலுவூற்றிவருகிறது.

கொங்கு வரலாறு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர்.

இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.

இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.