இன்றைய தகவல்


தொழில் தொடங்க ஒரு வாய்ப்பு
கொங்கு கூட்டமைப்பு பல்வேறு சமுதாய பணிகளை செவ்வனே செயல்படுத்திவருகிறது. அரசியல் சாராமல் முழுக்க சமுதாய கண்ணோட்டத்துடன் செயல்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக நமது கொங்கு இளைஞர்கள் மற்ற நிறுவனங்களில் வேலைதேடி அலையவேண்டிய துயரத்தைபோக்க அவர்களை சுயதொழில்செய்து வாழ்க்கையில் முன்னேற்றும் ஒரு செயல்திட்டத்தை நடைமுறைபடுத்த முயற்சிக்கிறது.

முதல் கட்டமாக அவரவர் தகுதிகேற்ப சிறு தொகையை மூலதனமாக கொண்ட தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டும்விதமாக திட்டமிடபட்டுள்ளது. அதன்படி பெரு நிறுவனங்களான கட்டுமான தொழில், பின்னலாடை தொழிற்சாலைகள், போன்ற நிறுவனங்களின் துணை ஒப்பந்ததாரர்களாக, ஏற்றுமதி செய்யும் சிறு நிறுவனங்களாக சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் கொங்கு கூட்டமைப்பின் பொது செயலாளர் திரு பி.டி.ராஜமாணிக்கம் அவர்களை 9976298799 அல்லது 0424 2275799 அல்லது திரு. சுரேஷ் அவர்களை 9629325135 எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

விபரங்களை கொங்கு கூட்டமைப்பு தலைமை நிலயம், 5, பாரதி தாசன் சாலி, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு 11 என்ற முகவரியில் தங்களைபற்றிய விபரங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம்.

முதல் கருத்தரங்கம் ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும். ஜீன் மாதம் 20ந் தேதிவரைக்கும் பதிவு செய்தவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கபடுவார்கள். இத்திட்டம் ஒரு மாதிரி செயல்திட்டம் என்பதால் கிடைக்கிற வரவேற்பைபொருத்து திட்டம் விரிவாக்கபடும். கொங்கு இளைஞர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திகொள்ள வேண்டுகிறோம்.

நன்றி. கொங்கு கூட்டமைப்பு தலைமை நிலயம். ஈரோடு.

காலிங்கராயான் மாணவர் கல்வி உதவி திட்டம்

மேற்படி திட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் கல்லூரி கட்டணமின்றி இலவசமாக படிக்கவும், மேற்படிப்பிற்கு நிதியுதவி தேவைபடும் மாணவ மாணவியர் தங்கள் பகுதியிலுள்ள கூட்டமைப்பின் உறுப்பினர் சங்கங்களுடனோ அல்லது கூட்டமைப்பின் தலைமை நிலயத்தில் திரு. பி.டி.ராஜமாணிக்கம் அவர்களையோ தொடர்புகொண்டு விண்ணப்பங்கள் பெற்று பூர்த்திசெய்து கொடுக்கவும். விண்ணப்பங்கள்பெறா கடைசி தேதி - 10.07.2016.

தொடர்பிற்கு: திரு. ராஜமாணிக்கம், பொது செயலாளர் +91 9976298799 அல்லது அலுவலக எண் 0424 2275799 தொடர்புகொள்ளவும்.

கொங்கு கூட்டமைப்பு, தலைமை நிலயம், 5-பாரதிதாசன் வீதி, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு-11 (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம்)

Firebase SDK Loading…