திரு. வெள்ளைகினர் சின்னப்ப வெள்ளிங்கிரி கவுண்டர்

கவுண்டர்கள் இந்த மன்னின் மைந்தர்கள். அதில் வெள்ளைகினர் கவுண்டர் குடும்பம் இன்றும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக இன்றும் நினைக்கப்படுவர். இந்த குடும்பத்தின் நட்சத்திரமாக இருப்பவர் திரு. வெள்ளைகினர் சின்னப்ப வெள்ளிங்கிரி கவுண்டர், அனைவராலும் VCV என்று அழைக்கப்படுவார்.

வெள்ளைகினர் கவுண்டர்கள் ஈரோடு பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள். அவர்கள் ஏழு தலைமுறைக்கு முன்னாள் வந்தவர்கள். முன்னால் நிதியாலர்களாக இருந்தவர்கள், பின்னாளில் நிலகிலார்கள் ஆனார்கள்.

திரு VCV அவர்களால் மேட்டுப்பாளையம் சாலையில் நடப்பட்ட புளியமரங்கள்.

அக்டோபர் 28 , 1880 ஆம் ஆண்டில் செல்வாக்கு நிறைந்த பண்ணையாரான திரு. V.K. சின்னப்ப கவுண்டர் மற்றும் திருமதி. பார்வதி அம்மாளுக்கும் பிறந்தவர் திரு. வெள்ளைகினர் சின்னப்ப வெள்ளிங்கிரி. சின்னப்ப கவுண்டர் ஆறு கிராமங்களில் பண்ணை வைத்திருந்தார். அது மற்றுமன்றி வெள்ளிங்கிரி பள்ளத்தாக்கில் 1600 ஏகர் பரபளவில் ஏரிகளும், ஆறுகளும் நிறைந்த பண்ணையை வாங்கினர்.

சின்னப்ப கவுண்டரின் ஏழு குழந்தைகளும் நல்வாழ்க்கை புரிந்தனர். VCV அவர்கள் தனது இளமை கால கல்வியை கோவையில் பயின்றார். தனது தந்தையின் மறைவால் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டார். திரு VCV யும் அவரது உடன் பிறப்புகளும் அந்தபகுதியில் உள்ள தங்களது பாரம்பரிய வீட்டில் வசித்தனர். 1898ல் திரு. VCV , நரசிபுரத்தை சார்ந்த நஞ்சம்மாள் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர்.

இதயத்தில் நின்ற சிந்தனையாளர்

அவரது தந்தையை தொடர்ந்து, வேளாண்மையை முழுநேர தொழிலாக கொண்டார். அவரது புதிய உக்திகளால் அவரது குடும்பமும் நமது பகுதியும் பெரிதும் பயனடைந்தன. அவரது காலத்தில் அவரது பண்ணையின் பரப்பளவு சுமார் 6000 ஏக்கராக இருந்தது. அவர் மேலும் சேலம் மாவட்டம் ஆத்தூர் முதல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வரை பண்ணைகளை வாங்கினர். இது மற்றுமன்றி ஊட்டி, மேட்டுப்பாளையம், மற்றும் கோவை சார்ந்த பகுதிகளிலும் நிலங்களை வாங்கினார்.

விவசாயம் மற்றும் அதனை சார்ந்த நடைமுறைகளும் அவரது ஆற்றலால் பெரிதும் பயனடைந்தது. பஞ்சு உற்பத்தி தொழில் பல்வேறு புதுமையான யுக்திகளை அறிமுக படுத்தி அதன் வளர்சிக்கு பெரும் பங்காற்றினார். இதனுடைய தொடர்ச்சியாக, இந்திய மத்திய பஞ்சு கூட்டுறவிற்கு தென்னிந்தியாவின் முதல் பிரதிநிதியாகவும், பின்னர் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

முற்போக்கு சிந்தனையாளரான அவர், தனது பரந்த பண்ணைகளை நிர்வாகிக்க 25 கீமீ தொலைவுக்கு உள்ள வெள்ளைகினர் - செம்மேடு பகுதிக்கு கம்பி முலமாக "ஹாட் லைன்" (hotline) வசதியை செய்துகொண்டார்.

திரு. VCV அவர்களின் வளர்ச்சி

அவர் தனது முன்னேற்ற பாதையை தொடர்ந்து, இச்சமுதாயதிற்கு பங்களிக்க மாவட்ட கழகத்தில் உறுபினர்றானார். இதனை தொடர்ந்து அவர் மாவட்ட கழகத்தின் தலைவரானார். அக்காலத்தில் மாவட்ட கழகம், கோவை மற்றும்மன்றி பல்வேறு கொங்கு பகுதிகளையும் நிர்வாகித்தது..

இப்பொழுது உள்ள ரயில், பொது போக்குவரத்து மற்றும் பல்வேறு நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இவரது காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இவரது காலத்தில் ABT , SRT மற்றும் KMS போன்ற புகழ்பெற்ற பல பொது பேருந்து நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அவர் மாவட்ட கழகத்தின் தலைவராக பதவி வகித்த காலகட்டத்தில், கோவை - பொள்ளாச்சி ரயில்பாதையையும், சத்தியமங்கலம் - மைசூர் காட் நெடுஞ்சாலையை அமைக்கவும் முக்கிய பங்களித்தார். உள்ளூர் அமைப்புகளில் கிடைத்த அனுபவமும் நம்பிக்கைகளையும் வைத்து, அவர் இந்த நாட்டை வளர்க்க, 1920 ல் ப்ரோவின்சியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் (Provincial Legislative Council) உருப்பினரானார்.

இதற்கு பின்னார், VCV அவர்கள் 1932 ல் பல்வேறு முக்கிய பிரமுகர்கர்களின் போட்டிக்கு மத்தியில் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1945 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீண்டும் வெற்றி பெற்றார். டெல்லியில் இவ்வாறு பதவி வகித்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதற்கு சம்பத்தப்பட்ட ஆவணங்களும், கோப்புகளும் பிற்காலத்தில் கரையான்களால் அளிகப்பட்டுவிட்டன.

டேவிட் அர்னோல்ட் (David Arnold) எழுதிய "The Gounders and the Congress" (கவுண்டர்களும் காங்கிரசும்) என்னும் புத்தகத்தில் " V.C. வெள்ளிங்கிரி கவுண்டர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கவுண்டர் சமுதாயத்திலேயே மேற்கத்திய கல்வி முறையை கர்ப்பிக்கபட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்கள். வெள்ளிங்கிரி அவர்கள் அந்த பகுதியில் ஒரு முக்கிய மிராஸ்தர்ராவார் . கோவை அருகில் உள்ள அவரது பண்ணையின் அருகில் உள்ள வேளான் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செம்மைபடுதபட வேளான் முறைகளை தனது பண்ணையில் அறிமுகப்படுத்தினார்…"

திரு. VCV பஞ்சு தொழிலில் எந்திரன்களை அறிமுகப்படிதியவர்களில் ஒருவர் ஆவார். அவர் 1936 ல் ஞானம்பிகா ஆலையை நிறுவினார். அதனை தொடர்ந்து கோட்டைமேடில் ஒரு ஓடு தொழிற்சாலையும், அவரது தோட்டத்தில் அரிசி ஆலையும் ஆரம்பித்தார். அந்த பகுதியில் ஒரு சாலைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் விவசாயகளுக்காக மேட்டுப்பாளையத்தில் 1920 ல் சாரதா நிதி என்னும் ஒரு வங்கியை ஆரம்பித்தார். அதனை அப்போது இருந்த சிருங்கேறி ஆச்சர்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1921 ல் அவரது யோசனையால் கொங்கு வெள்ளாள சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் அவரது சமுதாய மக்களை ஒன்றுதிரட்டி, அவர்களது அரசியல் மற்றும் சமுதாய மேன்மைக்காக பாடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் விவசாயிகளுக்காக ஓர் சந்தையை ஆரம்பித்தார். இன்றும் அவ்விடம் VCV பேட்டை என அழைக்கபடுகிறது.. திரு. VCV அவர்கள் காலதடை பராமரிப்பு துறை வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றினார்.

சமுகம் மற்றும் சமயத் தொண்றாட்டால்

திரு. VCV அவர்கள் 1907 ஆம் ஆண்டு பஜனை கோவிலில் ஓர் அழகிய கோபுரத்தை நிறுவினார். அவர் பழனி மற்றும் மருதமலை கோவில்களின் அறங்காவலர் குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

ஆரம்ப காலத்தில் ராமகிருஷ்ண வித்யாலய பள்ளி அவரது தோட்டத்தில் இளமையான முறையில் நடைபெற்று வந்தது. அவர் திரு. T.S. அவிநாஷிலிங்கம் செட்டியார் அவர்களுக்கு ஊக்கமும் உதவியும் அளித்து வந்தார். வட கோவை முதல் துடியலூர் வரை சுமார் 6 கீமீ நீளத்திற்கு 1922 ல் திரு. VCV நட்டிய புளியம் மரங்களின் மூலமாக வரும் வருவாயை அவர் அமைத்த அமைப்பின் மூலம் பல்வேறு சமுக பணிகளை செய்து வந்தார்.

தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான அவர் ஆங்கிலேயர்களின் மரியாதைகளை ஏற்க மறுத்து, தனது நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டுக்கும் உழைபதையே சந்தோசமாக எண்ணிக்கொண்டார்.

VCV அவர்கள் நவம்பர் 7, 1948 அன்று நடந்த வாகன விபத்தில் இயற்கை ஏய்தினார். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர் பள்ளி ஒன்றினையும் பல்வேறு சமுக சேவைகளையும் செய்து வருகின்றனர். அவரை பற்றிய முக்கிய குறிப்புகள், கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் அவர் வாழ்ந்த வீட்டினையும் அவரது குடும்பத்தினர் அவரது நினைவாக நன்கு பராமரித்து வருகின்றனர். திரு. VCV அவர்கள் அவரது வளர்ச்சி, அரசியல் செல்வாக்கு மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்காகவும் என்றென்றும் நினைக்கப்படுவர்.