கொங்கு செய்திகள்


மலேசியா இபோ நகரில் கொங்கு கருத்தரங்கம்

மலேசிய நாட்டில் இபோ நகரில் வாழும் கொங்கு சொந்தங்கள் நடத்தும் மலேசியா நாமக்கல் நல சங்கம், சென்ற ஜீலை மாதம் 19ம் நாள் மற்றும் 20ம் நாள் கல்வி,கலை, அறிவியல், தொழில் பண்ணாட்டு கரத்தரங்கம் ஒன்றை நடத்தினர். கருத்தரங்கம் வாயிலாக தொழில் துறையில் மலேசியா மற்றும் பண்ணாட்டு வர்த்தகம் பற்றிய தகவல்கள், தொழிதுறை வல்லுநர்களுடம் தொடர்பு ஏற்படுத்திகொள்ளல், கல்வி துறைபற்றிய விழிப்புணர்வு மற்றும் கொங்கு சொந்தங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகபடுத்திகொள்ளுதல், கொங்கு சமுதாயத்தின் கலாச்சரம் அறிதல் போன்ற நல்லதொரு தொடக்கமாக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டது.

இக்கரந்த்தங்கில் இந்தியா,பிஜி, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தொழில் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறையில் சிறந்துவிளங்கும் முனைவர்கள் மற்றும் மலேசியா அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பரேக் நகரின் முதல்வரின் முதன்மை ஆலோசகர் திரு. டத்தோ இளங்கோ வடிவேலு அவர்கள், பரேக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திரு. எஸ். கே. தேவசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் இருந்து முன்னாள் நாடாளூமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய பிற்பட்டோர் நல துறை உறுப்பினர் திரு. கார்வேந்தன் அவர்கள் மற்றும் சென்னை எம். ஜி. ஆர் கல்லூரியின் பேராசிரியர் திரு. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் கொங்கு நாட்டைசேர்ந்த கீழ்கண்ட கொங்கு சொந்தங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டது.
1. திரு. இராஜா சண்முகம், திருப்பூர் - தொழில் துறையில் சிறப்பு
2. டாக்டர் திரு. பாலசுப்பிரமணியம், கோவை - மருத்துவ துறையில் சிறப்பு
3. திரு. பி.வி.கல்யாணசுந்தரம், சென்னை பாலிமர் டிவி - மீடியா துறையில் சிறப்பு
4. திர். எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம் - மக்கள் சேவையில் சிறப்பு

மலேசியாவில் வாழும் கீழ்கண்ட கொங்கு சொந்தங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டது
1. திரு. டான் எம். இராமசாமி - தொழில் துறை சிறப்பு
2. திரு. டத்தோ டாக்டர் எம். தமிழ்செல்வன் -மருத்துவ துறையில் சிறப்பு
3. திரு. எஸ். நடேசன் - கல்வி துறையில் சிறப்பு

200 கொங்கு சொந்தங்கள் கருத்தரங்கத்தில் பதிவுசெய்து கலந்துகொண்டனர். இரவு விருந்தில் 300க்கும் மேற்பட்ட கொங்கு சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முதன்முறையாக ஏற்பாடுசெய்யபட்ட கருத்தரங்கம் அதிக ஆதரவுடன் நடைபெற்றதுடன், பலபேருக்கு பேருதவியாக இருந்தது என்பதும் மிகமுக்கியமானதாகும். இது இபோ நகர் கொங்கு சங்கத்தின் ஒரு வெற்றிகரமான கண்ணி முயற்சி என்பது பாராட்டுகிறியது.